கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, விடிய விடிய ஊருக்குள் நடமாடிய இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
நேற்று இரவு தாசம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள், அதிகாலையில் பால் வியாபாரி ஒருவரை துரத்தியுள்ளன.
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.