மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமுதாயத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக் கொண்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் பாதிப்பின்போது, தமிழக பாஜக மருத்துவப் பிரிவினருடன் களத்தில் பணியாற்றியதை, அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மருத்துவர்கள் அரசியலில் ஈடுபடும் போது, நோயாளிகளின் நாடித்துடிப்பை உணர்வது போன்று, சமூகத்தின் நாடித்துடிப்பையும் உணர முடியும் என தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.