சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன் படி, திருவனந்தபுரம்- சில்சார் இடையிலான வாராந்திர விரைவு ரயில், கோவை- சில்சார் வாராந்திர விரைவு ரயில், கன்னியாகுமரி- திப்ருகார் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
இன்று முதல் இந்த புதிய எண்களின்படியே ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.