டெல்லியில் காவல் ஆணையர் அலுவலக தின விழாவில் பங்கேற்ற துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அணிவகுப்பை பார்வையிட்டார்.
டெல்லியில் ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, டெல்லி நியூ போலீஸ் லைன்ஸ் பரேட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கலந்து கொண்டார்.
அலங்கரிக்கப்பட்ட காரில் சென்ற துணைநிலை ஆளுநருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையும் துணைநிலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல் ஆணையர் அலுவலக தின விழாவையொட்டி டெல்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.