இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய தருணம் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார். புதிய ராணுவ தளபதியாக பதியேற்றுக் கொண்ட உபேந்திர திவேதி தனது சகோதரரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதனை தொடர்ந்து தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ராணுவத்தை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமக்கு இது மிகவும் கவுரமான தருணம் என குறிப்பிட்டார்.
இந்திய ராணுவம் தியாகம் மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது எனக்கூறிய அவர், போரில் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறினார்.
நமது ராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து வழங்குவது மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட ராணுவ தளபதி, உள்நாட்டில் செய்யப்படும் உபகரணங்களையே ராணுவம் கொள்முதல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.