கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் கரூர்-வாங்கல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.