144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் - தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போராட்டத்திற்கான காரணம், குறித்து தற்போது பார்க்கலாம்.

பாகிஸ்தானில் தற்போது நிலவும் கூடுதல் பதற்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லபாய்க் நடத்திய பேரணிதான் காரணம். பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணியாக செல்ல முயன்றனர்.

தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணியாகச் சென்ற அவர்களை பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தியது. இதனால் தெஹ்ரிக்-இ-லபாய்க் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதல், திடீரென வன்முறை கொப்பளிக்கும் போர்க்களமாக மாறியது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் காவல்துறையினரை இஸ்ரேலிய குண்டர்கள் என்று அழைத்த தெஹ்ரீக்-இ-லபாய்க் அமைப்பினர், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தெஹ்ரீக் அமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட சென்றவர்களை தடுக்க, போலீசார், தடுப்புகள் அமைத்தும், அகழிகள் தோண்டியும், கப்பல் கொள்கலன்களையும் அடுக்கி வைத்திருந்தனர்.

கைது ஒரு பிரச்சனையல்ல, தோட்டாக்கள் ஒரு பிரச்சனையல்ல, குண்டுகள் ஒரு பிரச்சனையல்ல – தியாகம்தான் எங்கள் விதி எனத் தெஹ்ரரீக் தலைவர் சாத் ரிஸ்வி தெரிவித்தார். போராட்டங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இரண்டாவது நாளாக வாழ்க்கையை முடக்கியது, இரண்டு நகரங்களும் ஒரு கோட்டையாகப் போன்று மாறியது, முக்கிய சாலைகள் சீல் வைக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

பாலஸ்தீன ஆதரவு போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுவதாகப் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில் எந்தவொரு குழுவும் வன்முறையைப் பயன்படுத்தவோ அல்லது அரசை அச்சுறுத்தவோ அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Tags: pakistan144 baninternet shutdown: Pakistan brought to a standstill by Tehreek-e-Labaik protests144 தடை உத்தரவு இணையசேவை முடக்கம்பாகிஸ்தானில் இணையசேவை முடக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

Next Post

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies