டி-20 உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 28ஆம் தேதி நீட் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடின.
மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, டி-20 உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தபோது உறுப்பினர்கள் மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், மைக்கை கட்டுப்படுத்துவது நாற்காலியில் அமருபவர் கையில் இல்லை என்றும், இது கால காலமாக நடைமுறையில் உள்ள நடவடிக்கை எனவும் விளக்கமளித்தார்.
உறுப்பினர்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்தார்.