மேற்குவங்கத்தில் பெண் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம், உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் சாலையில் பெண் மற்றும் ஆண் ஒருவரை பிரம்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்பட்டாத நிலையில், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த தஜிமுல் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இஸ்லாம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.