படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வு பூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, பூமி பூஜை செய்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை முழுமையாக பேச விடுவதில்லை என்றும், சட்டமன்றத்தில் தாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டினார்.
மேலும், நல்ல தலைவர்கள் தமிழகத்திற்கு வர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சொன்னதில் எந்த மாற்று கருத்தில்லை என்றும், சினிமா நடிகர்கள் அரசியல் தலைவராக மாறிய பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.