மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.
வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.