கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து, டி.கே.சிவக்குமார் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, பெங்களூருவில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சில அமைச்சர்கள் எம்எல்ஏக்களை தரக்குறைவாக நடத்துவதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் வினய் குல்கர்னிபுகார் தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து டி.கே.சிவக்குமார் விலகவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் இந்த தகவலை மறுத்துள்ளனர்.