நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடையே சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடியை அடுத்துள்ள மருதகுளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில், 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பு மாணவர்களை சாதிய ரீதியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த இரண்டு மாணவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகள், பள்ளியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
நாங்குநேரியிலுள்ள பள்ளியில் சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில், பள்ளி மாணவன் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அதே பகுதியிலுள்ள மற்றொரு பள்ளியில், மாணவர்களிடையே சாதி ரீதியாக மோதல் ஏற்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
			















