தென்காசி அருகே சந்தன மரம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை கடம்பன் பாறை பகுதியில் உள்ள சந்தனக்காட்டில் விலை உயர்ந்த சந்தன மரங்களை சிலர் வெட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்