கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!
Oct 2, 2026, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2025, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை  தனிப்படை போலீசார்  சுட்டுப்பிடித்தனர்.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 பேர்  கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாகக் குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், துடியலூர் அருகே குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்க முயன்றபோது போலீசார் மீது அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதில், தலைமைக் காவலருக்கு இடதுகையில் காயம் ஏற்பட்ட நிலையில், 3 பேர் மீது போலீசார்  துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். காலில் குண்டடிப்பட்ட 3 பேரும் கையில் காயம் ஏற்பட்ட தலைமைக் காவலரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட 3 பேரில் குணா என்பவர் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், சகோதரர்களான கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகியோர்  சிவகங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது.

மேலும், 3 பேர் மீதும் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Coimbatore: Police special forces shoot and arrest 3 people in gang rape of studentகோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
Share
Tweet
SendShare
Previous Post

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Next Post

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

Related News

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies