தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையில் மின்விளக்கு வசதி செய்து தர வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
புதுரோடு சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மாவீரன் பகத்சிங் இரத்ததான கழக அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















