டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தியதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அதிபர் என்ற முறையில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு மேற்கொண்ட செயல்களுக்கு ட்ரம்ப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்போதைய அதிபர் ஜோ பைடன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்க மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்று என்றும், இது ஓர் ஆபத்தான முன்னுதாரணம் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் யாரும் அரசர் இல்லை என்ற அடிப்படையில்தான் நாடு தோற்றுவிக்கப்பட்டதாக கூறிய பைடன், ட்ரம்ப் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அந்த அடிப்படையையே மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டார்.