இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமி பதவி வழங்கியுள்ளதாகச் செங்கோட்டையன் ஆதரவாளர் அந்தியூர் மோகன்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர் அந்தியூர் மோகன்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அந்தியூர் தொகுதியில் தனது தந்தை சண்முகவேல் போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர்.ராஜா எதிராகச் செயல்பட்டதாக தெரிவித்தார்.
அதிமுகவை வீழ்த்தப் பலரையும் தொடர்பு கொண்டு இ.எம்.ஆர்.ராஜா பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகச் செயல்பட்ட இ.எம்.ஆர்.ராஜாவுக்கு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் பதவி வழங்கி உள்ளதாகவும் மோகன்குமார் விமர்சித்தார்.
மேலும் தனது தந்தையை தோற்கடிக்க கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு இ.எம்.ஆர்.ராஜா பேசியதாக ஆடியோ ஒன்றையும் மோகன்குமார் வெளியிட்டார்.
















