மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதுடன், காங்கிரஸ் கட்சி கொடிகளை பறித்து நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு நிலவியது.தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது உள்ளிட்ட திமுகவினர், காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தலைதெறிக்க ஓடினர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பானுசேகர் மற்றும் பொறுப்பாளர் ராஜா, மணல்மேடு அன்பழகன் ஆகியோர் காயமடைந்தனர். இதனிடையே அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கொடிகளை பறித்த திமுகவினர், நடுரோட்டில் வீசியெறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
















