மரங்களை நட்டு பூமியை பாதுகாக்க வேண்டுமென, வன மகோத்சவ் திருவிழாவை ஒட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மரம் நடும் திருவிழாவான வன மஹோத்சவ் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நமது சுற்றுச்சூழல் அமைப்பில், காடுகள் வகிக்கும் முக்கிய பங்கை வன மஹோத்சவ் திருவிழா நினைவூட்டுவதாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான கொள்கைகளால், வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும், அதற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.