கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
பரைக்கோடு பகுதியை சேர்ந்த தங்கம் என்ற மூதாட்டி ஏழ்மை காரணமாக சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து அதனை விற்பனை செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அழகியமண்டபம் பகுதியில் பழைய பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது திருவட்டாரில் இருந்து சென்ற பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.