நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
டிரம்ளா பகுதியை சேர்ந்த சுரேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
மேல் குன்னூர் பெட்போர்டு பகுதியில் சென்றபோது தனது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது வலதுபுறம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சுரேந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.