மயிலாடுதுறையில் ஜெட் விமான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், ஜெட் விமானம் தாழ்வாக பறக்கும் போது சில நேரங்களில் காற்றின் அலை காரணமாக சிறிய சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்படுவது இயல்புதான் எனத் தெரிவித்தனர்.