திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிராம சபை கூட்டத்தின்போது ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வெலக்கல்நத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்களை அமர வைத்து கிராமசபை கூட்டம் நடத்தப்படுவதாகவும், அரசு வீடு உள்ளிட்ட சலுகைகள் ஒருசிலருக்கு மட்டுமே கிடைப்பதாகவும் கூறி ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபை கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தின்போது அரசு வீடு வழங்க வேண்டுமென பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.