டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி சந்தித்தார்.
ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே பணி ஓய்வுபெற்ற நிலையில், அந்தப் பொறுப்புக்கு உபேந்திர திவிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உபேந்திர திவிவேதியின் மனைவியும் உடனிருந்தார்.