மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக புது டெல்லி பாஜக எம்.பி. பான்சூரி ஸ்வராஜ் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்துக்கள் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மக்களவை விதி எண் 115-இன்கீழ் பான்சூரி ஸ்வராஜ் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதில், ராகுல் காந்தி முன்வைத்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதாகவும், தேசத்தை தவறாக வழிநடத்துவதாகவும் பான்சூரி ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், மக்களவை விதி எண் 115-ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பான்சூரி ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.