அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள இந்திய தின அணிவகுப்பில், ராமர் கோவில் வடிவ ஊர்தி இடம்பெறவுள்ளது.
இந்த ஊர்தி, 18 அடி நீளம், ஒன்பது அடி அகலம் மற்றும் எட்டு அடி உயரத்தில் இருக்கும் என்று அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் அமிதாப் மிட்டல் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, நியூயார்க்கில் ஆண்டுதோறும் இந்திய தின அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.