மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையுடன் சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் மணப்பாறையை சேர்ந்த கிஷோர் சகாயராஜ், அபிஷேக், பிரதீஷ் பாலா, மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
இதனைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.