வேலூரில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியூர் பாரதி நகரைச் சேர்ந்த ராஜா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் டீ கடைக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ராஜாவை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கொலையில் ஈடுபட்ட சந்துரு, அஜித்குமார், ராஜேஷ், தேஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.