உதகையில், சிறுத்தை புலி ஒன்று வீட்டு வாசலில் தொங்க விட்டிருந்த பூந்தொட்டிகளை தொட்டு விளையாடும் காட்சி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள FUN CITY குடியிருப்பு பகுதியில், சிறுத்தை ஒன்று புகுந்தது.
அங்கு வீட்டு வாசலில் தொங்க விட்டிருந்த பூந்தொட்டிகளை தொட்டு விளையாடியது. பின்னர் வீட்டு வாசலில் இருந்த செருப்பை சிறுத்தை புலி எடுத்து சென்றுள்ளது.
இதுதொர்பான சிசிடிவி காட்சிகளை வீட்டில் உரிமையாளர் வனத்துறையிடம் அளித்ததை அடுத்து, சிறுத்தை புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.