உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டநெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்த புதின், ஹத்ராஸ் சம்பவத்துக்காக பிரதமர் மோடியிடமும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.