பார்படாசிலிருந்து நாடு திரும்பும் இந்திய கிரிக்கெட் வீரர்களை பிரதமர் மோடி நாளை வரவேற்கவுள்ளார்.
கிழக்கு கரீபியன் தீவு நாடான பார்படாசில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட சூறைக்காற்றால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், சிறப்பு விமானத்தில் இந்திய வீரர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
நாளை அதிகாலை டெல்லியில் வந்திறங்கும் அவர்களை பிரதமர் மோடி வரவேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.