ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தை அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 30, 2025, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தை அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jul 3, 2024, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல, கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற,  ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார்.

அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார்.

திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், திரு.ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.

தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: R. S. Bharati has insulted the entire student community! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர்களை வரவேற்கிறார் பிரதமர் மோடி!

Next Post

போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

Related News

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies