அமர்நாத் யாத்திரை தொடங்கிய 5 நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் அங்கு பயணித்து வழிபாடு நடத்தியுள்ளனர்.
இமயமலையில் தெற்கு காஷ்மீரில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கியது. அமர்நாத் யாத்திரை தொடங்கிய 5 நாளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வழிபாடு நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.