அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், திகவ், பேகி, குஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அசாமில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.