கோபிசெட்டிபாளையம் அருகே சத்தியமங்கலம் செல்லும் நெஞ்சாலையில் வழி தவறி சென்ற ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, மூலவாய்க்கால் பகுதியில் உள்ள புதருக்குள் மறைந்து நின்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், தகவல் தெரிவித்தையடுத்து, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஒற்றை காட்டு யானையை பாதுகாப்பாக வனபகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.