பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு கடந்த ஜூன் 26ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 96 வயதான அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் கடந்த ஜூன் 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.