கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது போலீசார் தண்ணீரை விசிறியடித்தனர்.
முறையான பாடத்திட்டம் இன்றி கல்லூரிகளில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்ததையும், கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் அருகே கூடிய மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை விசிறியடித்தனர். இதனால் மாணவர்கள் நிலைகுலைந்தனர்.