புரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, ஒடிசாவில் 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கவிருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், 28 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து வருவதாகவும், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுவதாகவும் புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் சங்கர் தெரிவித்துள்ளார்.