விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கள்ளச்சாராயம் அருந்திய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயதான முதியவர் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை தொடர்ந்து விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்துக்கு ஒருவர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.