உத்தரப்பிரதேசத்தில் 54 கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமயமாதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, தாயின் பெயரில் ஒரு மரம் எனும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மரம் நட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.
அந்தவகையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் மரக்கன்றை நட்டார்.
அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ் மரம் நடுவதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள நர்சரிகளில் 54 கோடி மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.