தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சேதமடைந்து வருவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்காரம்பேட்டை, பாபநாசம், திருப்பாலைத்துறை, உத்தானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலை ஒரு மாதத்திலேயே சேதமடைந்து காணப்பட்டது.
78 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த சாலைகள் தரமற்ற முறையில் உள்ளதாகவும், துறை சார்ந்த அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.