நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தனியார் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த சாரதா என்ற பெண், சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்றுவிட்டு தனியார் பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, பேருந்தின் கம்பியை பிடிக்காமல் நின்று கொண்டிருந்த சாரதா, வளைவு ஒன்றில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சக பயணிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.