சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கட்டிட தொழிலாளியின் வீட்டில் 65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
ஜீவா நகரை சேர்ந்த முத்து என்பவர் குடும்பத்துடன் சொந்த ஊரான சின்ன கண்ணனூருக்கு சென்றிருந்தார்.
இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 17 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.