மதுரையில் சாலையில் நின்று கொண்டிருந்த நபரை போதை கும்பல் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை நேதாஜி சாலையில் 4 இளைஞர்கள் போதையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டிருந்த நபரை அரிவாளால் வெட்டினர்.
சுதாரித்துக்கொண்ட இளைஞர் உடனடியாக வீட்டுக்குள் சென்றதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். இந்த போதை கும்பல் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.