ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் சாலையோரத்தில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பானிப்பூரிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
ராமேஷ்வரம் நகரில் உள்ள பானிப்பூரி கடைகள் உரிய ஆவணங்கள் இன்றி அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து பானிப்பூரி கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் உரிய ஆவணமின்றி செயல்பட்ட கடைகளை அகற்றினர்.
மேலும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பானிப்பூரிகளை சாலையில் கொட்டி அழித்தனர்.