விருதுநகரில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய வாடிக்கையாளரிடம் பணம் இல்லை என கூறிய வங்கி இழப்பீடு வழங்க வேண்டுமென நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாரிமுத்து என்பவர் இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கி ஆயிரத்து 500 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அவரது கணக்கில் பணம் வரவு வைக்கைப்படாமல் இருந்தது.
இது குறித்து அவர் மாவட்ட நுகர்வோர்குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, பாதிக்கப்பட்ட மாரிமுத்துவுக்கு இழப்பீடாக 21 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என வங்கி மேலாளருக்கு உத்தரவிட்டார்.