உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக போலே பாபாவின் ஆசிரமத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர்.
போலே பாபா சாமியார் தலைமறைவான நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள ராம் குதிர் அறக்கட்டளையில் போலே பாபாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.