கொலை முயற்சி வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட சீர்காழி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27-ம் தேதி பட்டப்பகலில் மதன்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு போலீசாரின் மெத்தன போக்கே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட 7 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.