குடியரசுத் துணைத்தலைவர் ஜூலை 6 முதல் இரண்டு நாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் ஜூலை 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் கேரளாவில் பயணம் மேற்கொள்கின்றனர்.
முதல் நாளன்று, திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தன்கர் உரையாற்ற உள்ளார்.
சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கவுள்ளார். அடுத்த நாள் கொல்லம், அஷ்டமுடி முகத்துவாரம் ஆகிய இடங்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் செல்லவுள்ளார்.